உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரக்கிளை அகற்றும் பணி மாநகராட்சியில் தீவிரம்

மரக்கிளை அகற்றும் பணி மாநகராட்சியில் தீவிரம்

சென்னை, சென்னையில் பிரதான சாலை முதல் உட்புற சாலை வரை, பசுமைக்காக மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழை காலங்களில் காற்று மற்றும் அதீத மழையின்போது, மரங்கள் வேரோடு சாய்ந்து விபத்துகளை ஏற்படுத்துகின்றன.இவற்றை தவிர்க்கும் வகையில், மரக்கிளைகள் அகற்றும் பணியை மாநகராட்சி துவக்கியுள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் சமீபத்தில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. தட்ப வெப்பநிலை மாற்றத்தால், இதுபோன்ற நிகழ்வு நடைபெறுகிறது. எனவே, மரங்கள் வேரோடு சாய்வதைத் தடுக்கும் வகையில், மரக்கிளைகளை அகற்றும் பணி நடக்கிறது. இதனால், மரம் சாய்வது தவிர்க்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை