உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பந்தல் இருக்கு தண்ணீர் இல்லை அரசியல் கட்சியினர் மீது அதிருப்தி

பந்தல் இருக்கு தண்ணீர் இல்லை அரசியல் கட்சியினர் மீது அதிருப்தி

பூந்தமல்லி, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினர் பிரமாண்டமாக திறந்த தண்ணீர் பந்தல்களில், தற்போது தண்ணீர் வைக்காததால், பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், பூந்தமல்லி அருகே பாரிவாக்கம், வரதராஜபுரம், காட்டுப்பாக்கம் பகுதியில், கடந்த 1ம் தேதி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திறப்பு விழா அன்று அலங்கார பந்தல், கட்சி கொடிகள் என, ஆடம்பரமாக விழா நடந்தது.மாவட்ட செயலர் நாசர், பூந்தமல்லி தி.மு.க., - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்தனர்.திறப்பு விழா அன்று மட்டும் இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், மோர், குளிர்பானம் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பிறகு, தண்ணீர் பந்தல் மட்டுமே உள்ளது. இங்கு தண்ணீர் பானையும் இல்லை. இதே போல், குன்றத்துார் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கொளப்பாக்கம், கெருகம்பாக்கத்தில் கடந்த மாதம் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலர் கந்தன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். விழா முடிந்த அடுத்த நாள், தண்ணீர் பந்தலில் தண்ணீர் வைக்கவில்லை. பந்தலும் அகற்றப்பட்டது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர், சுய விளம்பரத்திற்காக பல இடங்களில் தண்ணீர் பந்தலை திறக்கின்றனர். இங்கு ஒரே ஒரு நாள் தண்ணீர் வைக்கப்படுகிறது.இதனால், மக்களுக்கு எந்தவித பயனும் இல்லை. தண்ணீர் பந்தல் திறந்தால், கோடைக்காலம் முடியும் வரை மண் பானையில் தண்ணீர் வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ