உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1,200 போதை மாத்திரை பறிமுதல் பீர்க்கன்காரணையில் மூவர் கைது

1,200 போதை மாத்திரை பறிமுதல் பீர்க்கன்காரணையில் மூவர் கைது

தாம்பரம், தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை ஏரிக்கரையில் உள்ள சுடுகாட்டில், நேற்று சிலர் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்தனர்.பீர்க்கன்காரணை போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், தேவநேச நகரை சேர்ந்த சதீஷ்குமார், 21, உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.ரயில் வாயிலாக மும்பையில் இருந்து சட்டவிரோதமாக, 1,200 போதை மாத்திரைகள் வாங்கி வந்து, விற்பனை செய்ய வைத்திருந்ததும் தெரியவந்தது.இன்ஸ்டாகிராம் நட்பு வாயிலாக கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான மூவரும், டிசம்பர் மாதம் ஆந்திராவுக்கு சென்று, கஞ்சா கடத்தி வந்து, ஜனவரி முதல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும், விசாரணையில் தெரியவந்தது.அதில் இரட்டிப்பு லாபம் கிடைப்பதால், வெளி மாநிலங்களுக்கு சென்று, உயர் ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, வண்டலுார் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், சலுகை முறையில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை