உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

எடை சட்டத்தில் மாற்றம் வேண்டாம் என வணிகர்கள் மனு

சென்னை: அரிசி, பருப்பு வகை, மாவு வகை உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள், 25 கிலோவுக்கு கீழ் உள்ள பேக்கிற்கு, 5 சத-வீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இதை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.உணவு பொருட்கள் எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்ய, தற்போது மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால், உணவுப் பொருட்கள் எவ்வளவு எடை உடைய பாக்-கெட்டாக இருந்தாலும், ஜி.எஸ்.டி., விதிக்கும் நிலை உருவாகும் என்பதால், உணவுப் பொருட்களின் விலை உயரக்கூடும்.எனவே, எடையளவு சட்டத்தில் திருத்தம் செய்வதை கைவிடு-மாறு, தமிழக அரிசி ஆலை வணிகர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளன தலைவர் துளசிங்கம், செய-லர் மோகன், டில்லியில், நேற்று முன்தினம் மத்திய உணவு துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை சந்தித்து மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை