உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புட் போர்டு பயணத்தில் இறந்த மாணவர் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுப்பு

புட் போர்டு பயணத்தில் இறந்த மாணவர் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் மறுப்பு

சென்னை, பேருந்து படிக்கட்டில் பொறுப்பற்ற முறையில் பயணம் செய்து மரணமடைந்த மாணவரின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க முடியாது என, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை கொளத்துாரைச் சேர்ந்த பள்ளி மாணவர் மோகன், தன் நண்பர்களுடன், 2019 அக., 16ல், மாநகர பேருந்தில் படிக்கட்டில் நின்றவாறு பயணம் செய்தார். கொளத்துார் பாரதிநகர் சந்திப்பு, செங்குன்றம் சாலையில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவர் இறந்தார்.இதையடுத்து மாணவரின் குடும்பத்தினர், 49 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.மாநகர போக்குவரத்துக் கழகம் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'ஓட்டுனர் மற்றும் நடத்துனர், பேருந்தின் உள்ளே வரும்படி அறிவுறுத்தியும், படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் வரவில்லை.படிக்கட்டில் நின்று கொண்டு ஜன்னல் கம்பியை பிடித்தபடி பயணம் செய்த மாணவர், கைப்பிடி நழுவியதால் சாலையில் விழுந்து இறந்தார். எனவே, மாநகர போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்க முடியாது' என கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:இந்த விபத்து தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில், விபத்தில் இறந்து போன மாணவர், பேருந்தின் ஜன்னலை பிடித்தவாறே படிக்கட்டில் பயணம் செய்ததாகவும், அப்போது தவறி கீழே விழுந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருந்த ஒருவர் அளித்த தகவலின்படி எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த விபத்துக்கு சம்பந்தப்பட்ட மாணவர்தான் பொறுப்பேற்க வேண்டும்.மாணவரின் கவனக்குறைவால் தான், அவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். எனவே, போக்குவரத்துக் கழகத்திடம் இழப்பீடு கோர முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

RAAJ68
ஆக 29, 2024 08:23

, இந்த மாணவன் கள்ளச்ராயம் குடித்து இறந்திருந்தால் பத்து லட்சம் கிடைக்கும். போங்கடா நீங்களும் உங்க சட்டமும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை