உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுனரை தாக்கி ஆட்டோவை திருடிய இருவர் கைது

ஓட்டுனரை தாக்கி ஆட்டோவை திருடிய இருவர் கைது

கோயம்பேடு, ஓட்டுனரை தாக்கி, ஆட்டோவை பறித்துச் சென்ற இரு ஆட்டோ ஓட்டுனர்களை, போலீசார் கைது செய்தனர்.திருவேற்காடு, சக்ரேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் கேசவராஜ், 28; ஆட்டோ ஓட்டுனர். இவர், நேற்று அதிகாலை 1:30 மணியளவில், திருவேற்காடில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு சவாரி சென்றார். பின், அடுத்த சவாரிக்காக, கோயம்பேடு 100 அடி சாலையில் காத்திருந்தார்.அப்போது, அங்கு வந்த இருவர், கேசவராஜை தாக்கி, அவரிடம் இருந்த 200 ரூபாய் மற்றும் ஆட்டோவை பறித்துச் சென்றனர்.இதுகுறித்து கேசவராஜ், கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து சோதனை செய்தனர்.இந்நிலையில், கோயம்பேடு - பூந்தமல்லி நெடுஞ்சாலை, ரோகிணி திரையரங்கம் அருகே, திருடப்பட்ட அந்த ஆட்டோவை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.ஆட்டோவில் வந்த இருவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர்கள், அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி,'என் பிளாக்'கை சேர்ந்த கார்த்திக், 24, மற்றும் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரைச் சேர்ந்த தனுஷ், 29, எனத் தெரிந்தது. இருவரும், ஆட்டோ ஓட்டுனர்கள் என்பதும் தெரியவந்தது. இதில், கார்த்திக் மது போதையில் இருந்துள்ளார். இதையடுத்து, எழுதி வாங்கிக் கொண்டு, அவரது தாயுடன் அனுப்பி வைத்துள்ளனர்.இதையடுத்து, தனுஷிடம் விசாரித்து வந்த போலீசார், நேற்று இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ