உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கழிவு நீர் பிரச்னை இரு வீட்டார் மோதல்

கழிவு நீர் பிரச்னை இரு வீட்டார் மோதல்

கொளத்துார், கொளத்துார், கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 41. இவர், வீட்டில் மீன்களுக்கு உணவாக தரும் புழுக்களை வளர்ந்து வருகிறார். அதன் கழிவுநீர் வீட்டின் எதிரே உள்ள சம்பத், 60, என்பவரின் வீட்டு வழியாக செல்கிறது. இதுதொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் சம்பத் மதுபோதையில் பச்சையப்பனிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த பச்சையப்பன் சம்பத்தை தாக்கியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சம்பத்தின் மகன் மணி, 25, அவரது நண்பர்கள் பச்சையப்பன் வீட்டிற்கு சென்று பீர்பாட்டிலால் தாக்கியுள்ளார். அப்போது பச்சையப்பனும் எதிர்த்து தாக்கியுள்ளார்.இதில் மணி தலையில் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பச்சையப்பனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ராஜமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி