உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அ.தி.மு.க.,வினர் விழ 2 பேர் கால்கள் போதும்: உதயநிதி கிண்டல்

அ.தி.மு.க.,வினர் விழ 2 பேர் கால்கள் போதும்: உதயநிதி கிண்டல்

ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக, ஆலந்துாரில் நேற்று, அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தார்.அவர் பேசியதாவது:ஏப்., 19ல் நீங்கள் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு. டி.ஆர்.பாலுவை எட்டு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால், மாதம் இருமுறை தொகுதிக்கு வந்து மக்கள் குறை கேட்பேன்.ஆலந்துார் தாசில்தார் அலுவலகம் அருகில் சமீபத்தில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரி அமைக்கப்படும்.பரங்கிமலை கண்டோன்மென்ட் பகுதியில், இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வாலிபால் மைதானம், இறகுபந்து, கபடி மைதானம் அமைக்கப்படும்.பட்டா தொடர்பான பிரச்னை தீர்க்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்கப்படும். ஆலந்துார் பச்சையம்மன் கோவில் சாலை சந்திப்பில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும்.இந்த தொகுதியை பொறுத்தவரை, 120 கோடி ரூபாயில் முதற்கட்ட வெள்ள தடுப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது, 84 கோடி ரூபாயில் இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள், 123 கோடி ரூபாய் நடந்து வருகின்றன. குரோம்பேட்டை மருத்துவமனையை, 100 கோடி ரூபாயில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்றும் பணி நடந்து வருகிறது.எனவே, எனக்கு தெரிந்து, தமிழகத்திலேயே அதிக பணி நடந்த தொகுதி ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில்தான்.அ.தி.மு.க.,வினருக்கு தேவை இரண்டே இரண்டு கால்தான். ஜெ., இருந்தவரை அவர் காலில் விழுந்திருந்தனர். பிறகு சசிகலா, பன்னீர்செல்வம் காலில் விழுந்தனர். எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசை கேள்வி கேட்டால், பாதம்தாங்கி பழனிசாமி பதிலளிக்கிறார். இதுதான் கள்ளக்காதல். 2010ல் 'நீட்' வந்தது. ஆனால், தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெ., இருந்தவரை உள்ளே விடவில்லை. பழனிசாமி ஆட்சியில்தான், 2017ல் நுழைக்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்லாவரத்தில் பேசிய உதயநிதி, ''மீண்டும் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை மேலும் 500 ரூபாய் உயர்த்தப்படும். இந்தியாவை காப்பாற்ற வேண்டுமென்றால் 'இண்டியா' கூட்டணிக்கு ஓட்டளியுங்கள்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி