| ADDED : ஆக 08, 2024 12:42 AM
சென்னை, சென்னையில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று, புதிய வளாகங்கள், கட்டடங்களை துவக்கி வைத்தார்.1 திருவல்லிக்கேணி, துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், 3.22 கோடி ரூபாயிலும், பொன்னப்பன் சந்தில், 19.45 லட்சம் ரூபாயிலும் என, 3.41 கோடி ரூபாயில் இரு வணிக வளாகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இவற்றை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். 2 திருவல்லிக்கேணி கஸ்துாரிபாய் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கம், அதிதீவிர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வசதிகள், 6.17 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இன்போசிஸ் நிறுவனம், 30 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளது. 3 ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், 40.05 கோடி மதிப்பில், 100 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவுடன், 17,700 சதுர அடியில் இரண்டு மாடிகள் கொண்ட கட்டடம் கட்டப்படுகிறது. 4புதுப்பேட்டையில், ஒரு கோடி ரூபாயில் புதுப்பிக்கப்பட்டுள்ள பல் மருத்துவமனை திறக்கப்பட்டது.5 புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் உள்ள பல் மருத்துவமனை ஒரு கோடி ரூபாய் உபகரணங்களுடன் 35 லட்சம் ரூபாயில், மறு சீரமைக்கப்பட்டு உள்ளது. இவற்றை உதயநிதி திறந்து வைத்தார்.