உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

திட்டமிடாமல் கட்டிய கழிப்பறை மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியம்

வில்லிவாக்கம், சென்னை, அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இதில், இருபுறங்களில் உள்ள சாலையை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சியின் பேருந்து சாலைத் துறை முடிவு செய்துள்ளது.இதற்கான ஒருபுறம் 20 அடியும், மற்றொருபுறம் 10 அடியும் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதில், 20 அடி விரிவாக்கம் செய்யவுள்ள இடத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான ஆட்டுத்தொட்டி செயல்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட உள்ள ஆட்டுத்தொட்டியின் இடத்தில், சில மாதங்களுக்கு முன், மாநகராட்சி சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. இதை திறந்ததில் இருந்து, மக்கள் பயன்பாட்டிற்கு விடாமலும் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சிறிய கழிப்பறை ஒன்றும், பல ஆண்டுகளாக பயன்பாட்டின்றி கிடக்கிறது.இடங்களை முறையாக அதிகாரிகள் ஆய்வு செய்யாமல், சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ள இடத்தில் கழிப்பறை கட்டியுள்ளனர். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ