உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவியிடம் அத்துமீறல் மே.வங்க நபர்களிடம் விசாரணை

மாணவியிடம் அத்துமீறல் மே.வங்க நபர்களிடம் விசாரணை

வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி, அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். சிறுமி இரு நாட்களுக்கு முன், பள்ளியிலுள்ள கழிப்பறைக்கு சக மாணவியுடன் சென்றுள்ளார்.அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. சிறுமி சத்தமிடவே, மர்ம நபர் அங்கிருந்து தப்பியுள்ளார். சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர், வில்லிவாக்கம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். முதற்கட்ட விசாரணையில், மாணவி கூறிய அடையாளங்களை வைத்து, பள்ளியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க நபர்கள் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனத் தெரிந்துள்ளது.இதையடுத்து, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடும் மேற்கு வங்க மாநிலத்தவர் நால்வரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை