உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடுவுல கொஞ்சம் கால்வாயை காணோம் அரைகுறை பணியால் சாலையிலும் ஆபத்து

நடுவுல கொஞ்சம் கால்வாயை காணோம் அரைகுறை பணியால் சாலையிலும் ஆபத்து

செங்குன்றம்;செங்குன்றம், ஜி.என்.டி., சாலையில், சோத்துப்பாக்கம் சாலை சந்திப்பு முதல் தீர்த்தகிரையம்பட்டு ஊராட்சி, குமரன் நகர் வரை, இரண்டரை கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலையின் இருபுறமும், 7 அடி அகலம், 7 அடி ஆழத்தில், புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணி, கடந்தாண்டு மார்ச் மாதம் துவங்கியது.மொத்தம், 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புது வடிகால் அமைத்து சோத்துப்பாக்கம் சாலையை புதுப்பிக்கும் பணி நடந்தது. ஆனால், ஜி.என்.டி., சாலை சந்திப்பு முதல் புறவழிச்சாலை சந்திப்பு மற்றும் தீர்த்தகிரையம்பட்டு துணை மின் நிலையம் என, அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு, ஆங்காங்கே வடிகால் அமைக்கப்படவில்லை.தீர்த்தகிரையம்பட்டு, பெருமாள் கோவில் அருகே, சாலை மட்டத்திற்கு கீழ் வடிகால் உள்ளதால், மழைநீர் கோவில் அருகே உள்ள மைதானத்தில் தேங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.மேலும், வேகத்தடைகளில் கருப்பு, வெள்ளை வண்ணம் பூசப்படாததால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். அதுமட்டுமல்லாமல், வடிகாலுக்கும் சாலைக்கும் இடையே உள்ள பள்ளங்களும் சமன்படுத்தவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இது குறித்து பகுதிவாசிகள் புகார் எழுப்பியுள்ளனர்.இது குறித்து ஆவடி கோட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறுகையில், ''சில இடங்களில் வடிகால் தேவையில்லை. மேலும் அந்த இடங்கள் தனியாருக்கானது. இதனால் அங்கு வடிகால்வாய் அமைக்கவில்லை. மழைக்காலத்தில் தீர்த்தகிரையம்பட்டு பகுதியில் இனி வெள்ள பாதிப்பு ஏற்படாது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி