மேலும் செய்திகள்
எல்லப்பநாயுடு பேட்டையில் தொடர் மின்வெட்டால் அவதி
09-Aug-2024
செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், 35,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. படிப்பு, வேலைக்கு, இங்கிருந்து சென்னை மாநகரின் பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, கிண்டிக்கு காலையில், 10 - 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. மாலையில் கிண்டியில் இருந்து, செம்மஞ்சேரிக்கு, 30- 45 நிமிடத்திற்கு தான் ஒரு பேருந்து புறப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர், பெண்கள், முதியோர் மிகவும் சிரமப்படுகின்றனர். காலையில் புறப்படும்போது குறித்த இடத்திற்கு சென்றடைய ஒன்றரை மணி நேரம் ஆகிறது.மாலை விடு திரும்ப, இரண்டரை மணி நேரம் வரை ஆகிறது. மாலை நேரத்தில், கிண்டி, வேளச்சேரியில் இருந்து, செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.குணசேகரன், 46,பெரும்பாக்கம்
09-Aug-2024