மேலும் செய்திகள்
செய்திகள் சில வரிகளில்
7 hour(s) ago
தேசிய தலைவர் படத்தின் இசை, டிரெய்லர் வெளியீடு
8 hour(s) ago
தேசிய ஜூனியர் தடகள போட்டி சென்னை வீராங்கனையர் அசத்தல்
8 hour(s) ago
செம்மஞ்சேரி, சென்னை புறநகரில் உள்ள சேலையூர், மேடவாக்கம், காரணை, பெரும்பாக்கம், நாவலுார் உள்ளிட்ட பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், செம்மஞ்சேரி கால்வாய் வழியாக ஒக்கியம்மடு செல்கிறது. அங்கிருந்து, பகிங்ஹாம் கால்வாய் வழியாக முட்டுக்காடு கடலில் கலக்கிறது. இந்நிலையில், கால்வாய்களை மேம்படுத்த தமிழக அரசு 165 கோடி ரூபாயை ஒதுக்கியது.இதில், ஒட்டியம்பாக்கம் ஏரி உபரிநீர் வெளியேற, 1 கி.மீ., நீளம், 30 அடி அகலத்தில், அரசன்கழனி ஏரி வரை மூடு கால்வாய் கட்டப்பட்டது. அரசன்கழனி ஏரியில் இருந்து, செம்மஞ்சேரி கால்வாய் வரை, 975 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலத்தில், நுாக்கம்பாளையம் சாலையில் மூடு கால்வாய் கட்டப்பட்டது.அதேபோல், ஜவஹர் நகர், எழில் நகரில் இருந்து செம்மஞ்சேரி கால்வாய் வரை, 140 மீட்டர் நீளத்தில் மூடு கால்வாய் கட்டப்பட்டது. இந்த மூன்று நீர்வழித்தடங்களும், செம்மஞ்சேரி திறந்தவெளி கால்வாயில் இணைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 50 அடி அகலத்தில் இருந்த செம்மஞ்சேரி கால்வாய், 200 அடி அகலமாக மாற்றப்பட்டது. மேலும், பக்கவாட்டில் 10 அடி உயரத்தில் தடுப்பு சுவர் எழுப்பப்பட்டது. இதனால், முன்பை விட நீரோட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், வாரிய குடியிருப்புகள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்து கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், கால்வாய்க்குள் சகதி அதிகரித்து, புதர் மண்டி கிடக்கிறது. நவீன இயந்திரத்தை இறக்கி புதர்களை அகற்ற வேண்டும். ஆனால், ஒப்பந்த ஊழியர்களை இறக்கி, சகதியில் வளர்ந்துள்ள புதர்களை அகற்றுகின்றனர். இதில், சகதியில் சிக்கி அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது என, அப்பகுதிவாசிகள் அச்சம் தெரிவித்தனர்.
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago