உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவிக்கு லவ் டார்ச்சர் ரகளை வாலிபர் கைது

மாணவிக்கு லவ் டார்ச்சர் ரகளை வாலிபர் கைது

அம்பத்துார், சென்னை அம்பத்துார் அடுத்த கொரட்டூர் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 24. சில மாதத்திற்கு முன் முகப்பேர், ஜெ.ஜெ., நகரை சேர்ந்த, 20 வயது கல்லுாரி மாணவி 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளம் மூலம் அறிமுகமானார். இருவரும், மொபைல் போன் வாயிலாக பேசி, நண்பர்களாக பழகினர். இந்நிலையில், விஜயகுமாரின் நடவடிக்கை பிடிக்காமல், விஜயகுமாரின் நட்பை மாணவி துண்டித்து உள்ளார்.ஆத்திரமடைந்த விஜயகுமார், தினமும் மாணவியை பின்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ள மிரட்டியுள்ளார். இதுகுறித்து, அந்த மாணவி, தன் தந்தையிடம் தெரிவித்தார். அதனால், அவர் தினமும் மகளுக்கு துணையாக கல்லுாரி வரை சென்று, வந்தார். நேற்று மாணவியின் தந்தையை வழி மறித்து சரமாரியாக தாக்கிய விஜயகுமார், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.இதுகுறித்து திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் மாணவி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. விஜயகுமாரை நேற்று கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ