| ADDED : ஜூன் 07, 2024 12:38 AM
சென்னை, சென்னையில் நடந்த யுவா கபடி தொடரின் இறுதிப் போட்டியில் வேல்ஸ் பல்கலை அணி, கற்பகம் பல்கலை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.தமிழக பல்கலை அணிகளுக்கு இடையிலான யுவா கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள், சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்றன.மாநிலம் முழுதும் இருந்து 16 பல்கலை அணிகள் இதில் பங்கேற்றன.சென்னை வேல்ஸ், கோவை கற்பகம், பிரிஸ்ட், என்.ஏ.அகாடமி ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.முதல் அரை இறுதி ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலை அணி, 42---24 என்ற புள்ளி கணக்கில், என்.ஏ.அகாடமி அணியை வீழ்த்தியது.அடுத்த அரையிறுதியில் கற்பகம் பல்கலை அணி, 36---33 என்ற புள்ளி கணக்கில், பிரிஸ்ட் பல்கலை அணியை தோற்கடித்தது.நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், வேல்ஸ் பல்கலையுடன்- கற்பகம் பல்கலை அணி பலப்பரீட்சை நடத்தியது. இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் பல்கலை, 49---19 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் சதீஷ் கண்ணன் 12 புள்ளிகளை குவித்தார்.சாம்பியன் பட்டம் வென்ற வேல்ஸ் பல்கலை அணிக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இரண்டா-வது இடம் பிடித்த கற்பகம் பல்கலை அணி, 10 லட்சம் ரூபாய் பரிசாக பெற்றது.