உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது

ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற 11 பேர் கைது

சென்னை :சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், சி.எஸ்.கே., - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல்., டி - 20 கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் நடந்தது.இதற்கான டிக்கெட்டை, கள்ளச்சந்தையில் விற்ற கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 29, உட்பட, ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர்; 20 டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.அதேபோல, எழும்பூரில் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனையில் ஈடுபட்ட மோகன் மோத்வானி, 33, நிரஞ்சன், 29, ஆகியோரை போலீசார் கைது செய்து, 5 டிக்கெட் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் 40,500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி