உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காவலர் குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 146 பேர் மனு

காவலர் குறைதீர் முகாமில் கமிஷனரிடம் 146 பேர் மனு

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குறைதீர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இரு உதவி கமிஷனர்கள், 14 ஆய்வாளர்கள் உட்பட, 146 பேரிடம் குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் இருந்து போலீஸ் கமிஷனர் அருண், மனுக்களை பெற்றார். கொடுக்கப்பட்ட மனுக்களில், பணிமாறுதல், தண்டனை களைதல், காவலர் குடியிருப்பு கோருதல், ஊதியம் குறைபாடு களைதல் உள்ளிட்ட மனுக்கள் இருந்தன. பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கமிஷனர் அருண் உத்தரவிட்டார். இம்முகாமில், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் ஸ்ரீநாதா, கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ