15 மரங்கள் வேரோடு சாய்ந்தன
சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு, 15 மரங்கள் வேரோடு சாய்ந்தன. வடகிழக்கு பருவமழை சென்னையில் பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், வங்கக்கடலில் உருவான ‘முரசு’ புயலின் தாக்கத்தால், சென்னையில் சில இடங்களில் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் மட்டும், சென்னையில் மழைக்கு 15 மரங்கள் வேரோடு சாய்ந்தன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை, 150க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில், சில இடங்களில் வாகனங்களும் பாதிக்கப்பட்டன.