உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 16,000 குழந்தைகளுக்கு அப்பல்லோவில் இதய ஆப்பரேஷன்

16,000 குழந்தைகளுக்கு அப்பல்லோவில் இதய ஆப்பரேஷன்

சென்னை: சென்னையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, இதயநோயால் பாதிக்கப்பட்ட, 6,000 குழந்தைகளுக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சைகளையும், 10,000 குழந்தைகளுக்கு, நுண்துளை வழி இதய சிகிச்சைகளையும் அளித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து, அப்பல்லோ சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது:சென்னையில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை, 2009ல் துவக்கப்பட்டது. இதுவரை, 6,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு திறந்த நிலை இதய அறுவை சிகிச்சை களையும், 10,000 குழந்தைகளுக்கு நுண்துளை வழி இதய சிகிச்சைகளையும் அளித்து சாதித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின் மூத்த குழந்தை இதய அறுவை சிகிச்சை நிபுணர் நெவில் சாலமன் கூறியதாவது: இதய பாதிப்புள்ள குழந்தைகளுக்கு நுணுக்கமான தீவிர அறுவை சிகிச்சை, திட்டமிடல், அறுவை சிகிச்சைக்குப் பின் சிறந்த பராமரிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களை செய்ய வேண்டும். எங்கள் மருத்துவமனை, நோய் குறித்த தெளிவான பார்வை, சான்றுகளோடு நோயைக் கண்டறிதல், உடனடியாக முடிவெடுப்பது ஆகிய நடைமுறைகளை கொண்டுள்ளதால், எல்லாம் சாத்தியமாகிறது. இவ்வாறு அவர் கூறினார். அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனையின், மூத்த மருத்துவர், இதயநோய் நிபுணர் முத்துகுமரன் கூறுகையில், ''குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சைக்கு நுண்துளை வழி தொழில்நுட்பம் கைகொடுப்பதால், திறந்த நிலையிலான அறுவைச் சிகிச்சையின் தேவை குறைவதுடன், குணம் அடையும் காலமும் குறைகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி