உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1.80 லட்சம் தெருநாய்கள் மேலும் 3 கருத்தடை மையம்

1.80 லட்சம் தெருநாய்கள் மேலும் 3 கருத்தடை மையம்

சென்னை மாநகாட்சியில் சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த, கருத்தடை சிகிச்சை, வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.கடந்த, 2018ம் ஆண்டுகளில், 60,000மாக இருந்த தெருநாய்கள் எண்ணிக்கை தற்போது, 1.80 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த, மாநகராட்சி சார்பில், ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பு, மீனம்பாக்கம், சோழிங்கநல்லுார் ஆகிய ஐந்து இடங்களில், கருத்தடை மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் ஆண்டுக்கு, 47,000 தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், மாதவரம், அம்பத்துார், வளசரவாக்கம் ஆகிய மூன்று மண்டலங்களில், கருத்தடை மையங்களை அமைக்க, நேற்று நடந்த மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இங்கு சிகிச்சைக்காக வரும் நாய்களுக்கான கூண்டுகள், அறுவை சிகிச்சை அரங்கு, தடுப்பூசி மையம், சமையற்கூடம், உயிரிழந்த விலங்குளை எரியூட்டுவதற்கான எரிவாயு தகன மேடை உள்ளிட்டவை ஏற்படுத்தப்படும் என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி