உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடியில் 19 பசு மாடு சிறைபிடிப்பு

ஆவடியில் 19 பசு மாடு சிறைபிடிப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் பசு மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வந்தனர். இது குறித்து நம் நாளிதழிலும், அடிக்கடி செய்திகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் பணியில், நேற்று முன்தினம் நள்ளிரவு ஈடுபட்டனர். அதன்படி, மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சாலையில் இருந்து ஐந்துக்கும் மேற்பட்ட பசு மாடுகள் பிடிக்கப் பட்டன. மேலும், மிட்டண மில்லி, முத்தா புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதி களிலும், சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்து, கோசாலை எனும் மாடுகளை பராமரிக்கும் இடத்திற்கு கொண்டு சென்றனர். மொத்தமாக, 19 மாடுகள் பிடிக்கப்பட்டதாகவும், அதன் உரிமையாளர் களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி