மேலும் செய்திகள்
ஓட்டுநர் தினம் கிராமத்தினர் மரியாதை
25-Jan-2025
சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து அயனாவரம் செல்லும் தடம் எண்: 23சி மாநகர பேருந்தை, நேற்று முன்தினம் இரவு திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ஓட்டுநர் சிவானந்த் குமார், 42, என்பவர் ஓட்டி சென்றார்.பேருந்து, எழும்பூர் அடுத்த புதுப்பேட்டை ஆதித்தனார் சாலையில் சென்றபோது, அவ்வழியாக சென்ற பைக்கின் மீது உரசியதாக கூறப்படுகிறது.இதில் ஆத்திரமடைந்த பைக்கில் வந்த இருவர், பேருந்தை மறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும், பேருந்தின் முன் பக்க கண்ணாடியை மதுபாட்டிலால் உடைத்து தப்பினர். விசாரித்த எழும்பூர் போலீசார், ஆயிரம்விளக்கு, சுதந்திர நகரைச் சேர்ந்த சரத்குமார், 25, மற்றும் புதுப்பேட்டையைச் சேர்ந்த, 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
25-Jan-2025