கஞ்சா விற்ற 2 பேர் கைது
அம்பத்துார்,அம்பத்துார், கள்ளிக்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, அம்பத்துார் போலீசாருக்கு நேற்று முன்தினம் மாலை தகவல் கிடைத்தது. போலீசார் அங்குள்ள வீடு ஒன்றில் சோதனை மேற்கொண்டனர்.அங்கு கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், வீட்டிலிருந்த மூவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.அதில், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் குமார், 27, கோகுல்நாத், 27, மற்றும் விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன், 27, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், 25,000 ரூபாய் மதிப்பிலான இரண்டரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.