மொபைல்போன் திருட்டு சென்ட்ரலில் 2 பேர் கைது
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கும் அலுவலகம், காத்திருக்கும் அறை அருகில், பயணியரின் மொபைல் போன்கள் அடிக்கடி திருடு போயின.புகாரையடுத்து, சென்ட்ரல் ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், சந்தேகப்படும்படியாக நின்ற இருவரை பிடித்து, ரயில்வே போலீசார் விசாரித்தனர்.மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பூத் சிங் 32, திருவள்ளூரை சேர்ந்த ரகு 31 என்பதும், இவர்கள் மொபைல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.