மேலும் செய்திகள்
இருவழிச்சாலையான ஒரு வழிச்சாலை
28-Sep-2024
விமான சாகச ஒத்திகை நிகழ்ச்சியை கண்டு ரசித்த பின், கடற்கரையில் இருந்து வெளியேற முடியாமல் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.வாகன ஓட்டிகள் கூறியதாவது:மெரினாவில், உள்ளே நுழைவதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு ஒரு வழியுமே உள்ளன. மற்ற அனைத்து வழிகளையும், இரும்பு தடுப்புகளால் போலீசார் மூடிவிட்டனர்.மேலும், கடற்கரையில் இருந்து வெளியேறும் வாகனங்கள், விவேகானந்தர் இல்லம் அருகே மட்டுமே வெளியேறும் வகையில், போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், கடுமையான நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.ஒரே நேரத்தில் பல்வேறு சாலைகளிலும் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டதால், போக்குவரத்து போலீசார், செய்வதறியாது திணறினர். இரண்டு மணி நேரத்திற்கு பிறகே போக்குவரத்து நெரிசல் சீரானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.சாகச நிகழ்ச்சியை காண வந்தோரின் வாகனங்கள் செல்ல போதிய வசதி செய்யாததால், காமராஜர் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
28-Sep-2024