உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்

 2 டன் ரேஷன் அரிசி மணலியில் பறிமுதல்

மணலி: மணலியில் 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. மணலி, எம்.எப்.எல்., ரவுண்டானாவில், எண்ணுார் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரமவுலி தலைமையிலான போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாதவரம் விரைவு சாலையில் வந்த 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநர், போலீசாரை பார்த்ததும், வாகனத்தை திருப்ப முயற்சித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். இதில், மூட்டை மூட்டையாக 2 டன் ரேஷன் அரிசி சிக்கியது. விசாரணையில், பிடிபட்ட நபர் வியாசர்பாடியைச் சேர்ந்த அசன், 32, என்பது தெரிய வந்தது. அரிசி, வாகனம் மற்றும் அசனை, திருவள்ளூர் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினரிடம், போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை