உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முடிச்சூரில் 20 சவரன் நகை திருட்டு

முடிச்சூரில் 20 சவரன் நகை திருட்டு

முடிச்சூர்,தாம்பரம் அடுத்த முடிச்சூர், திருமலை நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார், 61. தேனாம்பேட்டையில் உள்ள ஏ.ஜி.எஸ்., அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் குடும்பத்தினருடன் சீர்காழிக்கு சென்றார். நேற்று அதிகாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 50,000 ரூபாய் திருடப்பட்டிருந்தது. பீர்க்கன்காரணை போலீசாரின் விசாரணையில், கிருஷ்ணகுமாரின் வீடு மட்டுமின்றி, அடுத்தடுத்து உள்ள இரண்டு வீடுகளில் திருட்டு நடந்தது தெரியவந்தது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே, திருட்டு போன பொருட்கள் குறித்த விபரம் தெரியவரும். அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய திருடர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !