மேலும் செய்திகள்
சுகாதார உதவியாளர்களை இடமாற்றம் செய்ய கோரி மனு
29-Oct-2025
சென்னை: சென்னையில், பல்வேறு புகார்களில் சிக்கிய மற்றும் ஓராண்டு நிறைவடைந்த 21 தாசில்தார்கள், இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாவட்டத்தில், 17 தாலுகாக்கள் உள்ளன. இதில், பெரம்பூர், திருவொற்றியூர், அம்பத்துார், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லுார், மதுரவாயல், அயனாவரம் ஆகிய தாலுகாக்களில் பணிபுரிந்த, தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுவிலக்கு, உதவித்தொகை, நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட துறைகளில் நியமிக்கப்பட்ட தாசில்தார்களும், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில், சென்னையில் 21 தாசில்தார்களை இடமாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுவாக ஒரு பணியிடத்தில், ஓராண்டு பூர்த்தியானபின், தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப் படுவர். கலெக்டர் உத்தரவை மதிக்காதது, சான்றிதழ்களை உரிய அவகாசத்தில் வழங்காதது, பொதுமக்கள் புகார் போன்ற காரணங்களால் மூன்று, நான்கு மாதங்களில் சில தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
29-Oct-2025