மேலும் செய்திகள்
சாலையோர வசதி மையம் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்
24-Oct-2025
சென்னை: அம்பத்துாரில் குறைந்த வருவாய் பிரிவினருக்காக கட்டப்பட்ட, 2,394 வீடுகள் தவணை முறையில் விற்கப்பட உள்ளதாக, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது. சென்னை அம்பத்துாரில், 2,394 வீடுகள் அடங்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இதில், குடியேற தயாராக உள்ள, 2,394 வீடுகள் விற்பதற்கான அறிவிப்பை, வீட்டுவசதி வாரியம் வெளி யிட்டுள்ளது. அடித்தளத்துடன், 19 மாடிகள் உடையதாக இக்குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. அனைத்தும், 628, 633 சதுர அடியில், இரு படுக்கை அறை வீடுகளாக உள்ளன. இவற்றின் விலை, 28.53 லட்ச ரூபாய். மாதம், 19,151 ரூபாய் முதல் 24,653 ரூபாய் வீதம், 15 ஆண்டுகள் வரை தவணைகள் செலுத்தலாம். இந்த வீடுகளை பெற விரும்புவோர், ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, https://tnhb.tn.gov.in/ என்ற இணைய தளத்தை அணுகலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.
24-Oct-2025