உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி

கால்வாயில் சாம்பல் அகற்ற ரூ.28 கோடி

சென்னை,பகிங்ஹாம் கால்வாயில் நிலக்கரி சாம்பல் கழிவுகளை அகற்றும் பணிக்கு, மின் வாரியம், 28 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு சொந்தமான வடசென்னை அனல்மின் நிலையம் உள்ளது.இங்கு, மின் உற்பத்திக்கு எரி பொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. மின் உற்பத்திக்கு பின் வெளியேறும் நிலக்கரி உலர் சாம்பல், பகிங்ஹாம் கால்வாய் அருகில் கொட்டி வைக்கப்படுகிறது.இது, பகிங்ஹாம் கால்வாயில் பரவி நீரோட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்து வருகிறது.இதனால், எண்ணுாரில் முகத்துவார அடைப்பால் கடலுக்கு செல்ல முடியாமல் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.இதற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பகிங்ஹாம் கால்வாயை ஆக்கிரமித்துள்ள நிலக்கரி சாம்பலை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இப்பணிக்கு நிதி வழங்கி, மின் வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நிலக்கரி சாம்பல் அகற்றும் பணிக்கு 28 கோடி ரூபாயை, மின் வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதியில், நீர்வளத்துறையினர் விரைவில் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை