மேலும் செய்திகள்
'ஏசி' மின் ரயில் ரத்து பயணியர் 'அப்செட்'
12-Oct-2025
சென்னை: 'சென்னையில், இரண்டாவது 'ஏசி' மின்சார ரயில், வரும் ஜனவரியில் இயக்கப்படும்' என, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் முதல் முறையாக, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில், கடந்த ஏப்ரல் மாதத்தில், 'ஏசி' மின்சார ரயில் சேவை துவங்கப்பட்டது. துவக்கத்தில் எட்டு சேவைகள் மட்டுமே இயங்கிய நிலையில், பயணியரின் விருப்பத்துக்கு ஏற்ப, நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கூடுதல் சேவைகள் துவங்கப்பட்டன. இதற்கிடையே, இரண்டாவது 'ஏசி' ரயில், ஆக., மாதத்தில் இயக்கப்படும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரையில் பயன்பாட்டிற்கு வரவில்லை. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தற்போது இயக்கப்படும், 'ஏசி' மின்சார ரயிலுக்கு, பயணியரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது, தினமும் சராசரியாக 2,800 பேர் பயணம் செய்து வருகின்றனர். ஐ.சி.எப்., ஆலையில் இருந்து, இரண்டாவது 'ஏசி' மின்சார ரயில் வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள், 'ஏசி' ரயில் ஒப்படைக்கப்படும். அதன்பின், ஜனவரியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில், 'ஏசி' மின்சார ரயிலுக்கான பயணியர் தேவை அதிகமாக இருக்கிறது. எனவே, இந்த தடத்தில் இயக்குவது குறித்து இறுதி செய்து, பின் அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
12-Oct-2025