ரயிலில் தனியாக பயணித்த 3 சிறுவர் - சிறுமியர் மீட்பு
பரங்கிமலை, மின்சார ரயிலில் ஆதரவின்றி பயணித்த இரண்டு சிறுமியர் உள்ளிட்ட மூன்று பேரை ரயில்வே போலீசார் மீட்டனர். தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில், நேற்று காலை பழவந்தாங்கல் நிலையத்தை வந்தடைந்தபோது, ஒரு பெட்டியில் 4, 2 வயது கொண்ட சிறுமியர், 3 வயது சிறுவன் ஆகியோர், ஆதரவின்றி தனியாக பயணித்தனர். இதைக் கண்ட ரயில்வே போலீசார், குழந்தைகளை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இறக்கினர். விசாரணையில், அவர்கள் தங்களின் பெயரை தவிர, வேறு எதையும் கூறவில்லை. இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளிடம், மூவரையும் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். சில நாட்களுக்கு முன், சானடோரியம் ரயில் நிலையத்தில் மூன்று வயது சிறுவனை, மர்மநபர் இறக்கிவிட்டு சென்ற நிலையில், மேலும், 3 சிறுவர் - சிறுமியர் மீட்கப்பட்டுள்ளனர். இது குறித்து, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.