பஸ் - ஆட்டோ மோதல் 3 பேர் காயம்
சென்னை, திருவல்லிக்கேணி அருகே, பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில், மூன்று பேர் காயமடைந்தனர்.பெரம்பூரில் இருந்து மெரினா பீச் செல்லும் தடம் எண்: 29ஏ மாநகர பேருந்து, நேற்று திருவல்லிகேணி, பெல்ஸ் சாலையில் வந்தபோது, எதிரே வந்த ஆட்டோவில் நேருக்கு நேர் மோதியது.இதில், ஆட்டோ அப்பளம்போல் நொறுங்கியது. ஆட்டோ ஓட்டுனர், அதில் பயணித்த இருவர் உட்பட மூவர் காயமடைந்தனர். அப்பகுதியில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.