உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயில் டிக்கெட் எடுக்க வந்தவரை தாக்கி போன், செயின் பறித்த 3 பேர் சிக்கினர்

 ரயில் டிக்கெட் எடுக்க வந்தவரை தாக்கி போன், செயின் பறித்த 3 பேர் சிக்கினர்

மாம்பலம்: மாம்பலம் ரயில் நிலையத்தில், டிக்கெட் எடுக்க காத்திருந்த நபரிடம் மொபைல் போன் மற்றும் வெள்ளி செயின் பறித்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். தி.நகர், சதுல்லா தெருவைச் சேர்ந்தவர் சீதுா, 26. இவர், நடேசன் பூங்கா அருகே உள்ள டிபன் கடையில் பணிபுரிகிறார். இவர், தன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் செல்ல, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய மாம்பலம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர் அருகே நேற்று அதிகாலை காத்திருந்தார். அப்போது, மது போதையில் வந்த மர்ம நபர்கள் மூவர் சீதுாவை தாக்கி, கழுத்தில் இருந்த வெள்ளி செயின் மற்றும் மொபைல் போனை பறித்து சென்றனர். இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மாம்பலம் போலீசார், அருகில் உள்ள டீக்கடையில், சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த மூவரை மடக்கி விசாரித்தனர். இதில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கரண், 22, சிவகங்கையைச் சேர்ந்த கமலேஷ்வரன், 19, திருச்செந்துாரைச் சேர்ந்த யாபி ஜேக்கப், 17 என, தெரியவந்தது. இவர்கள் சீதுாவை தாக்கி போன் பறித்தது தெரிய வந்தது. மேலும், இவர்கள் தி.நகரில் உள்ள பிரபல துணிக்கடையில் பணி செய்துக் கொண்டு, அந்நிறுவன விடுதியில் தங்கியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்து, ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ