மேலும் செய்திகள்
சென்னை - மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
28-Sep-2025
சென்னை:ஆயுதபூஜைக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் பயணியர், கிளாம்பாக்கத்திற்கு செல்வதற்காக, தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே, மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் தினமும், 600 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஞாயிறு மற்றும் பண்டிகைகளில், தேசிய விடுமுறை நாட்களில் வழக்கமாக, 40 சதவீத ரயில்கள் குறைத்து இயக்கப்படும். அந்த வகையில், வரும் அக்., 1ம் தேதி ஆயுதபூஜை, தேசிய விடுமுறை என்பதால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்ட்ரல் - அரக்கோணம், சூலுார்பேட்டை, வேளச்சேரி என, அனைத்து மின்சார ரயில் தடத்திலும், ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என, சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள்ளது. அதேசமயம், ஆயுத பூஜை பண்டிகையொட்டி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் வெளியூர் பயணியர் வசதியை கருத்தில் கொண்டு, தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே இன்று, மூன்று பயணியர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்தில் இருந்து இரவு 7:42 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு 8:03 மணிக்கு செல்லும் தாம்பரத்தில் இருந்து இரவு 7:53 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு இரவு 8:17க்கு செல்லும் தாம்பரத்தில் இருந்து இரவு 8:10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், கூடுவாஞ்சேரிக்கு இரவு 8:30 மணிக்கு செல்லும் என, தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.
28-Sep-2025