உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 அதிநவீன இழுவை வாகனம் காவல் துறையில் இணைப்பு

3 அதிநவீன இழுவை வாகனம் காவல் துறையில் இணைப்பு

சென்னை,சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள், கழிவுநீர் குழாயில் விரிசல் என, சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்துக்கு பிரச்னை ஏற்படுகிறது.சமீபத்தில், தரமணி டைடல் பார்க் மேம்பாலம் அருகே, சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் அவ்வழியாக சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளானது.அதை அப்புறப்படுத்த, சென்னை காவல் துறையில் எந்தவித வாகனமும் இல்லாததால், தனியாரிடம் இருந்து கிரேன் கொண்டு வந்து, கார் அகற்றப்பட்டது.இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சென்னை காவல் துறையில், தலா 30 லட்சம் ரூபாய் செலவில், 90 லட்சம் ரூபாய்க்கு, சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கக்கூடிய அதிநவீன, மூன்று இழுவை வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், 'பள்ளத்தில் விழுந்த, 4 டன் வரையிலான வாகனங்கள், பழுதாகி சாலையில் நிற்கும் 6 டன் வரையிலான அரசு பேருந்துகளையும், இந்த இழுவை வாகனங்களால் மீட்க முடியும். இவ்வாகனம் சேலத்தில் வடிவமைக்கப்பட்டு உள்ளது' என்றார்.சாலை விபத்தில் சிக்கி உருக்குலைந்த வாகனங்களில் இருந்து, உயிர்களை மீட்க நவீன இயந்திரங்களுடன் கூடிய 'வீரா' என்ற மீட்பு குழு வாகனம், ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை