30 சவரன் நகை மாயம் போலீசில் புகார்
அண்ணா நகர்,வீட்டின் பீரோவில் இருந்த, 30 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.அண்ணா நகர் கிரெசன்ட் சாலையை சேர்ந்தவர் நிராஜா, 38; தனியார் நிறுவன ஊழியர். சமீபத்தில் இவரது வீட்டில் இருந்த நகைகளை சோதித்துள்ளார். அப்போது, பீரோவில் இருந்த 30 சவரன் நகைகள் மற்றும் சில வெள்ளி பொருட்கள் காணாமல் போனது தெரிந்தது. தேடியும் நகைகள் கிடைக்காததால், அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். அதில், வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அண்ணா நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.