உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 300 மின்மாற்றி சுற்றி தடுப்பு வேலி

300 மின்மாற்றி சுற்றி தடுப்பு வேலி

ஆலந்துார்:ஆலந்துார் மண்டலத்தில் உள்ள 300 மின்மாற்றிகளை சுற்றி 5.62 கோடி ரூபாயில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளன.ஆலந்துார் மண்டலத்தில், 156வது வார்டு முதல், 167வது வார்டு வரை உள்ளது. இதில், மின் வினியோகத்திற்காக 300க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உள்ளன.பெரும்பாலான மின்மாற்றிகளின் கீழ் பகுதி, பராமரிப்பின்றி செடி கொடி வளர்ந்தும், குப்பை கொட்டப்பட்டும் உள்ளது. குப்பையில் திடீரென தீப்பிடித்து, மின்மாற்றியும் பழுதாகிறது.இதை தடுக்க, ஆலந்துார் மண்டலத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட மின்மாற்றிகளை சுற்றி பாதுகாப்பு இரும்பு தடுப்பு அமைக்கப்படுகிறது. இதற்காக 5.62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அடுத்த மூன்று மாதங்களுக்குள் இப்பணி முடிந்துவிடும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை