உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 31,500 தெருநாய்களுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி

31,500 தெருநாய்களுக்கு சிறப்பு முகாமில் தடுப்பூசி

சென்னை,சென்னையில் நடந்து வரும் தடுப்பூசி சிறப்பு முகாமில் இதுவரை, 31,500 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள தெருநாய்களுக்கு வெறிநாய் கடிநோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தும் முகாம், இம்மாதம் 9ம் தேதி துவக்கப்பட்டது. சென்னையில் உள்ள, 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு மண்டல வாரியாக தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d4ccjb4i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தினமும் 30 குழுக்கள் வாயிலாக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. ஒரு குழுவிற்கு, ஐந்து பேர் என, 150 பணியாளர்களும், 60 டாக்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணிகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 31,500 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மணலி, ஆலந்துார், மாதவரம் ஆகிய மண்டலங்களில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, தண்டையார்பேட்டை மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை