உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / "இன்னொரு ரவுண்டு சரக்கு கொடுரகளை செய்த விமான பயணிகள் கைது

"இன்னொரு ரவுண்டு சரக்கு கொடுரகளை செய்த விமான பயணிகள் கைது

திரிசூலம்:சிங்கப்பூர் விமானத்தில், கூடுதல் மது கேட்டு, ரகளை செய்த மூன்று பயணிகளை சென்னை விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.சிங்கப்பூரிலிருந்து நேற்று முன்தினம் இரவு ஏர்- இந்தியா விமானம் ஒன்று 232 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. பன்னாட்டு சேவை என்பதால், அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு மது வழங்கப்பட்டது.விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த தினகரன், 28, விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராம்பாபு, 28, திருவாரூரைச் சேர்ந்த அந்தோணி, 27, ஆகிய மூவரும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும், தங்களுக்கு கூடுதலாக மது வேண்டும் என்று விமான ஊழியர்களிடம் கேட்டனர்.அதற்கு, ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் மது வழங்க அனுமதியில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மூவரும் ஊழியர்களையும், சக பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும், இருக்கையில் இருந்து எழுந்து, அங்குமிங்குமாக ஓடி ரகளையில் ஈடுபட்டனர்.விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட்டை அணியவும் மறுத்து, அடம்பிடித்தனர். விமானம் சென்னையில் தரையிறங்கியதும், ஏர்- இந்தியா பாதுகாப்பு பிரிவினர் விமானத்தின் உள்ளே சென்று, ரகளையில் ஈடுபட்ட மூவரையும் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி