உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓ.எம்.ஆரில் 35 கி.மீ.,க்கு குடிநீர் குழாய்

ஓ.எம்.ஆரில் 35 கி.மீ.,க்கு குடிநீர் குழாய்

சென்னை, ஓ.எம்.ஆர்., பழைய மகாபலிபுரம் சாலையை ஒட்டி, சோழிங்கநல்லுார் மண்டலத்தில் 193, 195, 196, 198, 199 மற்றும் 200வது வார்டுகள் உள்ளன. அதேபோல், அடையாறு மண்டலத்தில் 173, 178 ஆகிய வார்டுகள் மற்றும் பெருங்குடி மண்டலத்தில் 184, 185 ஆகிய வார்டுகள் உள்ளன.நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் நிலையங்களில் இருந்து, இந்த வார்டுகளுக்கு தடையின்றி குடிநீர் வினியோகிக்க, ஓ.எம்.ஆரில் தனியாக குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, 98.28 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது. ஓ.எம்.ஆரில் தரமணி லிங்க் சாலை முதல், நுாக்கம்பாளையம் சாலை வரை, 35.41 கி.மீ., துாரம் குழாய் பதிக்கும் பணி நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ