புதிய வழித்தடத்தில் 4 பஸ்கள் இயக்கம்
ஒட்டியம்பாக்கம், பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டியம்பாக்கத்தில், நேற்று காலை புதிய வழித்தடத்தில், நான்கு மாநகரப் பேருந்துகள் சேவை துவக்கப்பட்டது.வழித்தட எண்: 51சி எனும் பேருந்து, வேளச்சேரியிலிருந்து, பள்ளிக்கரணை, மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், அரசன் கழனி வழியாக, புதுப்பாக்கம் வரை செல்கிறது. இந்த வழித்தடத்தில் இரு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.சைதாப்பேட்டையிலிருந்து இதே வழித்தடத்தில், புதுப்பாக்கம் வரை இரு பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில், மகளிர் இலவசமாக பயணிக்கலாம்.பேருந்து இயக்கத்தை சோழிங்கநல்லுார் தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிகழ்வில், ஒட்டியம்பாக்கம் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மேடவாக்கம் ஊராட்சி தலைவர், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.