மேலும் செய்திகள்
மதுபாட்டில் கடத்தியவர் கைது
17-Aug-2025
அடையாறு, புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் கடத்தி வருவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் இரவு, கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு முன் வாகன சோதனை நடத்தியபோது, சந்தேகத்தின் பேரில் வந்த ஒரு காரை மடக்கி, ஆய்வு செய்தபோது, அந்த காரில் மது பாட்டில்கள் இருந்தன. விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், 55, பழனிசாமி, 48, வள்ளி, 50, பூமாதேவி 49, ஆகியோர், புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரிந்தது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், 369 மது பாட்டில்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்தனர்.
17-Aug-2025