மெட்ரோ ரயிலில் 40 கோடி பேர் பயன்
சென்னை,:சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி நேற்றுடன், 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது. இதுவரை, 40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, 2015 ஜூன் 29ல் துவங்கப்பட்டது. முதலில், கோயம்பேடு மற்றும் ஆலந்துார் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன.தற்போது, விமான நிலையம் - விம்கோநகர், சென்ட்ரல் - பரங்கிமலை இடையே என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.மெட்ரோ ரயில் சேவை துவங்கி நேற்றுடன், 10 ஆண்டுகள் முடிந்துள்ளது. இதுவரை, 40 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். பயணியரின் வரவேற்பை தொடர்ந்து, சென்னையில் மேலும் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.