உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி மோதி டிரைவர் பலி ரூ.40.80 லட்சம் இழப்பீடு

லாரி மோதி டிரைவர் பலி ரூ.40.80 லட்சம் இழப்பீடு

சென்னை:சரக்கு லாரி மோதி உயிரிழந்த டிரைவரின் குடும்பத்தினருக்கு, 40.80 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை நந்தம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமணன், 43. தனியார் நிறுவன டிரைவரான இவர், 2020 டிச., 6ல், பாடியநல்லுார் போலீஸ் செக்போஸ்ட் அருகே, தன் மகனுடன் நடந்து சென்றார்.அப்போது, அவ்வழியே வந்த சரக்கு லாரி, லட்சுமணன் மீது மோதியது. நிலை தடுமாறி கீழே விழுந்தவர் மீது, லாரி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார்.இந்நிலையில், 80.53 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், லட்சுமணன் மனைவி செல்வி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'அதிவேகம், அஜாக்கிரதையாக சரக்கு லாரியை, டிரைவர் இயக்கியதே விபத்துக்கு காரணம். எனவே, மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 40.80 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி