உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கும்மிடிப்பூண்டி தடத்தில் 41 மின்சார ரயில்கள் ரத்து

கும்மிடிப்பூண்டி தடத்தில் 41 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை,ரயில் பாதை மேம்பாட்டு பணிக்காக, சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இன்று 41 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கும்மிடிப்பூண்டி - பொன்னேரி இடையே இன்று காலை 9:15 மணி முதல் பிற்பகல் 3:15 மணி வரை, ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன.இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.சென்னை சென்ட்ரலில் இருந்து சூலுார்பேட்டை - கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை - சென்னை சென்ட்ரல் இடையே, மொத்தம் 41 ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.அதேநேரம், பயணியர் வசதிக்காக சென்னை சென்ட்ரலில் இருந்து பொன்னேரிக்கும், பொன்னேரியில் இருந்து சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை வரையில் 21 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை