உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவடி கமிஷனரகத்துக்கு கூடுதலாக 433 போலீசார்: டி.ஜி.பி., தகவல்

ஆவடி கமிஷனரகத்துக்கு கூடுதலாக 433 போலீசார்: டி.ஜி.பி., தகவல்

ஆவடி, ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், திருமுல்லைவாயில், போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சமத்துவ பொங்கல் விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதில், தமிழக டி.ஜி.பி., சங்கர் ஜிவால் மற்றும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்று, போலீசாருடன் பொங்கல் வைத்து வழிபட்டனர். நிகழ்ச்சியில், உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய போட்டிகள் நடந்தன. போலீசாரின் குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பேசுகையில், ''ஆவடி போலீஸ் கமிஷனரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூடுதலாக 433 போலீசார் விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை