உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் கடத்தல் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை

போதை பொருள் கடத்தல் 5 பேருக்கு 10 ஆண்டு சிறை

சென்னை:போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஐந்து பேருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.ஆந்திரா மற்றும் ஒடிசா மாநில எல்லையில் இருந்து, சென்னை வழியாக இலங்கைக்கு மர்ம நபர்கள் போதை பொருள் கடத்துவதாக, என்.சி.பி., எனப்படும் மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு, 2019ல் தகவல் கிடைத்தது.இதையடுத்து, சென்னை அருகே, காரனோடை சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, இரண்டு வாகனங்களில், 107 கிலோ கஞ்சா கடத்தி வந்த, தமிழகத்தைச் சேர்ந்த ஈஸ்வரன், ஜெயபிரபு, ஜெயசந்திரன், சுருளிவேல் மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.இவர்கள் மீதான வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.அரசு தரப்பில் தகுந்த சாட்சிகளுடன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஈஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேருக்கும் தலா, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி