திருநின்றவூர், ஆவடி அடுத்த திருநின்றவூர், லலிதாஞ்சலி நகரில், முன்னாள் ராணுவ வீரரான ஜெயவீரன், 41, என்பவர், உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்,'ஜிம்' தொடர்பான உணவுகள் விற்பனை செய்து வருகிறார்.மேல் தளத்தில், இவரது தாய் தங்கியுள்ளார். இவர், தன் மனைவியுடன், திருநின்றவூர் சி.டி.எச்.சாலையில், வாடகை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 12ம் தேதி, குடும்பத்துடன் மகளைக் காண மதுரை சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினார். பின், அவரது அம்மா தங்கியுள்ள வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 5 சவரன் நகை, 80,000 ரூபாய் திருடு போனது தெரிந்தது.இது குறித்து விசாரித்த திருநின்றவூர் போலீசார், திருட்டில் ஈடுபட்ட சென்னை, சூளைமேடைச் சேர்ந்த மணிகண்டன், 20, மற்றும் சேத்துப்பட்டைச் சேர்ந்த உதயபாபு, 27, ஆகியோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.